கொவிட் 19 தொற்று காரணமாக ஜப்பானில் தடுத்துவைக்கப்பட்டிருந்த டயமண்ட் பிரின்ஸஸ் கப்பலில் இருந்த தமது நாட்டு பிரஜைகளை அமெரிக்க அழைத்து சென்றுள்ளது.
அதிலிருந்த 400 பேர் இரண்டு விமானங்களின் ஊடாக இன்று அதிகாலை அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் குறித்த டயமன்ட் பிரின்ஸஸ் சொகுசு கப்பலில் தங்கியிருந்த 40 அமெரிக்கர்கள் கொவிட் 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் ஜப்பானில் தடுத்து வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
3 ஆயிரத்து 700 பயணிகளுடன் பயணித்த குறித்த சொகுசு கப்பலில் ஹொங்கொங் பயணி ஒருவருக்கு கொவிட் 19 தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டதையடுத்து அந்த கப்பல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments
No Comments Here ..