20,May 2024 (Mon)
  
CH
சினிமா

திரைப்பட நடிகர் யோகி பாபுவுக்காக டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு சமூக வலைதளங்களை கிரங்கடித்து வருகிறார் துணை நடிகை ஒருவர்

இந்த வீடியோவில் யோகி பாபுவின் புகைப்படத்தை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளவர் திரைப்படங்களில் துணை நடிகையாக உள்ள சுஜி பிரதீபா. யோகி பாபுவின் தீவிர ரசிகரான இவர், டிக்டாக்கில் 3 லட்சம் பாலோயர்ஸுடன் வலம் வருகிறார். தனது டிக்டாக் பக்கத்தில், யோகி பாபுவை மையமாக வைத்து திரைப்பட பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு வீடியோ வெளியிட்டு ஏராளமான ஹார்ட்டீன்களை குவித்து வருகிறார் சுஜி பிரதீபா.

தற்போது, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வளர்ந்துள்ள யோகி பாபு, பல தடைகளை தாண்டி உச்சம் தொட்டவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். யோகி பாபுவின் இந்த கடின உழைப்பால் ஈர்க்கப்பட்டு அவரது ரசிகையான சுஜி பிரதீபா, அவரை காதலிப்பது போன்று, திரைப்பட காதல் பாடல்களுக்கு தொடர்ச்சியாக டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் யோகி பாபுவுக்கும், மஞ்சு பார்கவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த செய்தியை அறிந்த சுஜி பார்கவி அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், தனது சோகத்தை வெளிப்படுத்தும் வகையில் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு தனது ஆதங்கத்தை சுஜி பிரதீபா வெளிப்படுத்தினார்

இப்படி தொடர்ச்சியாக வீடியோ வெளியிடுகிறீர்களே உங்களுக்கு யோகி பாபுவை அவ்வளவு பிடிக்குமா என நமக்குள் எழும் கேள்வியை போல், டிக்டாக் வாசிகளுக்கும் சந்தேகம் எழுந்து அவரிடமே கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு, சுஜி பிரதீபா, விளக்கமளித்து வெளியிட்டுள்ள வீடியோவில், தமக்கு யோகி பாபுவை மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். 16 வயதில் இருந்து சினிமா துறையில் இருக்கும் தனக்கு அதில் சாதிப்பது எவ்வளவு கடினம் என்பது தெரியும், எனவே அவ்வளவு எளிதில் யாரையும் எடை போட்டு விடாதீர்கள் என அறிவுரை கூறியுள்ளார். யோகி பாபு தனக்கு மாமாவாகவோ மச்சானாகவோ இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தனது விருப்பத்தை அந்த வீடியோவில் சுஜி பிரதீபா வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு டிக்டாக்கில் யோகி பாபுவை நினைத்து உருகி தொடர்சியாக வீடியோ வெளியிட்டு வரும் சுஜி பிரதீபாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.




திரைப்பட நடிகர் யோகி பாபுவுக்காக டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு சமூக வலைதளங்களை கிரங்கடித்து வருகிறார் துணை நடிகை ஒருவர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு