18,Apr 2024 (Thu)
  
CH
பொழுதுபோக்கு

இந்தக் குழந்தை ஏன் அழுறான் தெரியுமா? கொஞ்சம் கேட்டுப்பாருங்கள் நம் கண்களும் கண்ணீரால் நிரம்பும்…..

பல ஆண்டுகளாக ராகிங், கேலி செய்தல் மற்றும் கொடுமைப்படுத்துதல் போன்ற விஷயங்களை தவிர்க்க பள்ளி, கல்லூரி நிர்வாகம் பல முயற்சிகளை எடுத்தும் அது பயனில்லாமல் தான் போய்விடுகிறது. இதனால் ஏற்படும் கொடூரமான விளைவுகளை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் ராகிங் காரணமாக தன் மகன் அனுபவித்த மோசமான சம்பவத்தை தாய் ஒருவர் பகிர்ந்துள்ளார். பிரிஸ்கேனில் உள்ள தனது மகனை தாய் அழைத்து செல்ல வந்த போதுதான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அந்த வீடியோவில் வரும் சிறுவன் குள்ளத்தன்மை உடையவராக உள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் அந்த சிறுவன், பள்ளியில் சக மாணவர்கள் என்னை குள்ளன் என ராகிங் செய்கிறார்கள். எனக்கு வாழவே பிடிக்வில்லை. ஒரு கயிறு இருந்தால் கொடுங்கள், நான் சாக விரும்புகிறேன். யாராவது என்னை கொல்ல வேண்டும் என்று நினைத்தாலும் எனக்கு சந்தோஷம் தான்“ என்கிறார். அவரது தாய் எவ்வளவு சமதானப்படுத்த முயற்சித்தும் அந்த சிறுவன் விடாமல் கதறி அழுகிறார்.

பேஸ்புக்கில் இந்த வீடியோவை பார்த்த பலர் அந்த சிறுவன் மற்றும் தாய்க்கு ஆதரவாகவும், ராகிங் செய்த சகமாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் பிராட் வில்லியம்ஸ் அந்த சிறுவனுக்காக நிதி திரட்ட தொடங்கினார். இதன் மூலம் அந்த சிறுவனுக்கு ரூ.1.30 கோடி நிதி வசூலாகி உள்ளது. இதை அந்த சிறுவனிடம் விரைவில் அவர் ஒப்படைக்க உள்ளார்.

 வீடியோவை பார்த்த இணையதள வாசிகள் #TeamQuaden என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி சிறுவனுக்கு ஆதரவாக குரலெழுப்பி வருகின்றனர்.







இந்தக் குழந்தை ஏன் அழுறான் தெரியுமா? கொஞ்சம் கேட்டுப்பாருங்கள் நம் கண்களும் கண்ணீரால் நிரம்பும்…..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு