ஜேர்மனியில் குர்து இன மக்களை இலக்கு வைத்த நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தையடுத்து, அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மசூதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பொலிஸார் அதிகம் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் குர்திஷ் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இத்தாக்குதலை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க கோரியும் வலியுறுத்தப்பட்டதையடுத்து, இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் மேற்கு நகரமான ஹனாவ் நகரில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) நடந்த தாக்குதல் ஜேர்மனியில் சிறுபான்மை சமூகங்கள் பாசிச மற்றும் இஸ்லாமிய வன்முறைக்கு ஆளாகக்கூடும் என்ற அச்சத்தை ஆழப்படுத்தியுள்ளதுடன், எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்த்துப் போராட மாநில அதிகாரிகள் எவ்வளவு செய்கிறார்கள் என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இனவாதக் கொள்கையுடைய 43 வயதான தொபியாஸ் ராதேன் என்பர், ஹனாவ் நகரில், குர்துகள் அதிகம் கூடும் இரு இடங்களில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10பேர் உயிரிழந்தனர். ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இத்தாக்குதலை மேற்கொண்ட பின்னர், துப்பாக்கிதாரி தனது 72 வயதான தாயை சுட்டுக்கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்துக் கொண்டார்.
இந்த தாக்குதல் சம்பவம், பெரும்பாலும் புலம்பெயர்ந்த பின்னணியுடன், தீவிர வலதுசாரி மாற்று ஜேர்மனி (ஆஃப்டி) கட்சிக்கு எதிராக பின்னடைவைத் தூண்டியுள்ளது.
தொபியாஸ் ராதேன், பல தீவிர வலதுசாரி சதி வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டார், அதே போல் சமூக ஊடகங்களில் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார், அதில் அவர் இனவெறி மற்றும் யூஜெனிச கருத்துக்களை ஆதரித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..