சுவிட்சர்லாந்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பயணிகள் விமானம் மீது முன்னெடுக்கப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பலியான 47 பேருக்கு உறவினர்களால் நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது.
சுவிட்சர்லாந்தின் Würenlingen பகுதியில் விபத்து நடந்த காட்டுப்பகுதியில் வெள்ளிக்கிழமை நினைவஞ்சலி கூட்டம் நடந்துள்ளது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பார்வையாளர்கள் அந்த நாள் மறக்க முடியாத ஒன்று என குறிப்பிட்டதாக, நினைவஞ்சலி கூட்டத்தின் இணை அமைப்பாளரும், விபத்தில் கொல்லப்பட்ட விமானியின் மகனுமான ருடி பெர்லிங்கர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்குதலின் பின்னணி தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
"நாங்கள் நீதிக்காகவும் இந்த கொடிய சம்பவத்தை மறக்கடிப்பதற்கு எதிராகவும் தொடர்ந்து போராடுகிறோம்," என்று பாதிக்கப்பட்ட பலர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1970 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் திகதி Würenlingen பகுதியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு புறப்பட்ட சுவிஸ் பயணிகள் விமானமானது புறப்பட்ட 9 நிமிடத்தில் வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்கானது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4500 மீற்றர் உயரத்தில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதனையடுத்து Würenlingen பகுதியில் உள்ள வனப்பகுதியில் விமானம் விபத்தில் சிக்கியது.
எருசலேமுக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்ட வெடிகுண்டே தவறுதலாக நடுவானில் வெடித்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது.
ஆனால் இதுவரை அந்த தாக்குதலின் உண்மையான பின்னணி தொடர்பில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..