ஐரோப்பாவில் கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடான இத்தாலியில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
மேலும் வடக்கு பகுதியிலேயே அதிகளவிலானவர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனாவுடன் தொடர்பு இல்லாத இடங்களில் வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளமை மற்றும் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளமை குறித்தும் உலக சுகாதார அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த தாக்கம் காரணமாக இத்தாலி அரசாங்கம் விளையாட்டு நிகழ்வுகளை இரத்து செய்துள்ளதுடன் சில பிராந்தியங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..