08,May 2024 (Wed)
  
CH
ஆரோக்கியம்

மன அழுத்தத்திற்கான சில காரணங்கள்

இன்றைய காலத்தில் பெரும்பாலானேர் மன அழுத்தத்தால் தினம் தினம் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

உண்மையில் அழுத்தத்திற்கு குடும்ப உறவுகளுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள், அன்பான ஒருவரின் பிரிவு அல்லது மறைவு காரணமாகிறது

அதுமட்டுமின்றி சிறு வயதில் உடல் ரீதியாக அல்லது மனரீதியாக துன்புறுத்தப்படுதல், பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தப்படுதல் ஆகியவையும் வளர்ந்த பிறகு மன அழுத்தத்தை கொடுக்கிறது.

மனசு சரி இல்லை என்று சொல்லுவது, அதிக நேரம் தூங்குவது, உடலில் சக்தி இல்லாமல் மயக்கம் வருவது போன்ற உணர்வு, எதிலும் கவனம் செலுத்த முடியாமை, வெறுமையை உணர்வது போன்றவை மன அழுத்தத்திற்கான அறிகுறிகளாக கருதப்படுகின்றது.

இந்த மன அழுத்தத்திலிருந்து விடுபட வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்தாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதே சமயம் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.

சாப்பாட்டில் நிறைய காய்கறிகளை சேர்த்து கொள்ளுங்கள். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

உடற்பயிற்சி, உங்கள் மூளை குணப்படுத்தி, இயல்பாக இயங்க வைக்கும்.

மனதில் அழுத்தத்தை உணர்கிற வேளையில், ஊட்டச்சத்து நிறைந்த ஆகாரங்களை உண்ண வேண்டும்.

காய்கறிகள், பழங்கள் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட புரதம் ஆகியவற்றை உண்ண வேண்டும்.

வைட்டமின் பி, வைட்டமின் டி மற்றும் ஒமேகா 3 வகை சத்துகள் அடங்கிய உணவுகளை சாப்பிடுங்கள்.

படுக்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பே தொலைக்காட்சி, மொபைல் போன் ஆகியவற்றை பார்ப்பதை நிறுத்தி விடுங்கள்.

படுக்கும் அறைக்குள் வெளிச்சம் வராமல் ஜன்னல் திரைகளை இழுத்து மூடிக்கொள்ளுங்கள். உறக்கம் வராமல் தவித்தால் நல்ல கதைப்புத்தகங்களை வாசிக்கலாம்.

படுத்த பிறகு இருபது நிமிடங்கள் கழித்தும் உறக்கம் வரவில்லையெனில், உடலை நீவி விடுங்கள்; கதைப் புத்தகம் வாசியுங்கள்; தியானம் செய்யுங்கள்; ஆழ்ந்து இழுத்து மூச்சு விடுங்கள். திரும்பவும் தூங்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.

பகல் பொழுதில் உடலில் சூரிய ஒளி படுவதற்கு அனுமதித்தல் மன அழுத்தத்தை போக்கும். இது மூளை செயல்பாட்டை தூண்டுவதோடு, சூரிய ஒளியில் வைட்டமின் டி சத்து உள்ளது. உடலில் ஹார்மோன்களையும் அது ஒழுங்குபடுத்தும்.

மனம் விட்டு சிரிக்கும்போது மன அழுத்தம் காணாமல் போகும். உங்கள்மீது அக்கறை கொண்டவர்களை சந்தியுங்கள்.

உங்கள் மனம் எதை விரும்புகிறதோ அதில் ஈடுபடுங்கள். கிடார், டிரம்ஸ் வாசிக்கலாம். கதைகள், துணுக்குகளை எழுதலாம்.

விருப்பமான விளையாட்டுகளை விளையாடலாம், இசை கேட்கலாம். உங்கள் மனம் எதை அதிகம் நாடுகிறதோ அதைச் செய்வீர்களானால் மன அழுத்தம் மாறும்.

வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யுங்கள். பரபரப்பாக செய்யுமளவுக்கு அதிக வேலைகளை வைத்துக்கொள்ளுங்கள். வேலையில் முழு கவனமும் சென்று விட்டால், மன அழுத்தமும் மறந்து போகும்.




மன அழுத்தத்திற்கான சில காரணங்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு