03,Dec 2024 (Tue)
  
CH
சுவிஸ்

கொரோனா வைரஸ் பீதியில் சுவிட்சர்லாந்தின் டிசினோ மண்டலம்

இத்தாலியில் உயிர் கொல்லும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில் 55 பேர் இலக்காகியுள்ள நிலையில், சுவிட்சர்லாந்தின் டிசினோ மண்டலம் உயர்மட்ட அவசர நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், காய்ச்சல் அறிகுறிகள் உள்ள எவரும் டிசினோவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முதல் இறப்பு பதிவான பின்னர், அண்டை மண்டலமான டிசினோவில் கொரோனா வைரஸ் பரவுவது குறித்த அச்சம் அதிகரித்து வருகின்றன.

இதனையடுத்து டிசினோ மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளன.

டிசினோவைச் சேர்ந்த மருத்துவர் ஜார்ஜியோ மெர்லானி ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பில் அதன் நிலைமை மற்றும் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருவதாகக் கூறியுள்ளார்.

இத்தாலியில் இருந்து சுமார் 68,000 பேர் டிசினோ மண்டலத்தில் பணியாற்றி வருகின்றனர்.

டிசினோவில் வேலை செய்ய இத்தாலிய எல்லைப் பகுதிகளிலிருந்து தினமும் மக்கள் பயணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





கொரோனா வைரஸ் பீதியில் சுவிட்சர்லாந்தின் டிசினோ மண்டலம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு