09,May 2024 (Thu)
  
CH
ஆரோக்கியம்

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள்

குழந்தைகள் பிறந்து குறைந்தது ஆறு மாத காலம் ஆகும் வரை அவர்கள் கட்டாயமாக குடித்து வளர வேண்டியது தாய்ப்பால் மட்டும் தான்.

தாய்ப்பால் மற்ற உணவுகளைவிட ஒரு உன்னதமான சத்துணவு ஆகும். தாய்ப்பால் கொடுப்பதால் பிள்ளை மற்றும் தாய் இருவரின் சுகாதார நலன்கள் பெருகும்.

அந்தவகையில் தற்போது தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

தாய்ப்பால் கொடுப்பதால், தாயின் கருப்பை வேகமாகச் சுருங்கும். குழந்தை பேருக்கு முன்பிருந்தது போன்றபடி மாற அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது நல்லது.

தாய்ப்பால் கொடுத்தல், உடல் எடை பிரசவத்திற்கு பிறகு ஏறாமல் தடுக்கச்செய்யும்.

தாய்ப்பால் கொடுப்பது ஒரு கருத்தடை முறையாகவே பார்க்கப்படுகிறது.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படாது.

பெண்களுக்கு உயர் ரத்த அழுத்த நோய் ஏற்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அதேசமயம் தாய்பால் கொடுத்த பெண்களுக்கு உயர் ரத்த நோய் எதுவும் ஏற்படவில்லை.

அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பதால், இதயம் பாதுகாக்கப்படுகிறது மற்றும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிகின்றன.

தாய்ப்பால் கொடுப்பது கர்பப்பை புற்று நோயிலிருந்தும் மார்பகப் புற்றுநோயிலிருந்தும் காக்கிறது.





தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு