02,May 2024 (Thu)
  
CH
கனடா

கழிவறையில் கமெராக்களை பொருத்திய நபரை சாடிய நீதிபதி!

கனடாவில் உணவகம் ஒன்றிலுள்ள கழிவறையில் இரண்டு கமெராக்களை பொருத்தியதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், கழிவறையில் கூட பெண்களை நிம்மதியாக விடமாட்டேன்கிறார்கள் என சாடினார் நீதிபதி.

ஜனவரி மாதம் 20ஆம் திகதி, கனடாவின் ரெஜினா பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் பெண்கள் கழிவறையில் ஒரு கமெரா மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பின்னர் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி, அதே உணவகத்தின் கழிவறையில், அதே இடத்தில், மற்றொரு கமெரா மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பெண்கள் கழிவறைக்குள்ளிருந்து ஆண் ஒருவர் வருவதைக் கண்ட உணவக ஊழியர்கள் கழிவறையை சோதனையிட்டபோது அந்த கமெரா அவர்களிடம் சிக்கியுள்ளது.

அதன்படி, ரெஜினாவைச் சேர்ந்த Aaron Alwood Wheeler (42) என்பவர் சிக்கினார். வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, இது பெண்களின் தனியுரிமையை மிக மோசமாக மீறும் ஒரு செயல் என்றார்.

எங்கே தனிமை வேண்டும் என பெண்கள் எதிர்பார்ப்பார்களோ, அங்கேயே இப்படி ஒரு மோசமான விடயம் நடக்கிறது என்பதை அறிந்தால், அது அவர்களை மிகவும் அதிகமாக பாதிக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றார் அவர்.

மார்ச் மாதம் 18ஆம் திகதி, Wheeler நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது




கழிவறையில் கமெராக்களை பொருத்திய நபரை சாடிய நீதிபதி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு