22,Feb 2026 (Sun)
  
CH
சினிமா

தளபதி மகனை இயக்கவிரும்பும் முன்னணி இயக்குனர்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உயரத்தில் பறக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக பிகில் படம் திரைக்கு வந்தது, இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றார், இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது.

தற்போது விஜய்யின் மகன் நன்கு வளர்ந்துவிட்டார், இதனால், இவரை ஹீரோவாக வைத்து படமெடுக்க பலரும் முயற்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் முருகதாஸும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார், அவர் விஜய்யின் மகனுக்காக ஒரு கதையை உருவாக்கி விஜய்யை அனுகியதாக பிரபலம் ஒருவர் தன் யு-டியுப் சேனலில் கூறியுள்ளார்.

ஆனால், விஜய் தெளிவாக இருக்கின்றாராம், தன் மகனுக்கு பிடித்தால் மட்டுமே சினிமாவில் களம் இறக்கவுள்ளதாக, பொறுத்திருந்து பார்ப்போம்.




தளபதி மகனை இயக்கவிரும்பும் முன்னணி இயக்குனர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு