09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

தீவிரமாகும் கொரோனா வைரஸ்

சீனாவில் தோன்றி பல நாடுகளிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களை அச்சத்திலும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்கு இதுவரை சுமார் 77,000க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. உலகளவில் இந்த நோய்த்தொற்று சுமார் 80,000 பேரை பாதித்துள்ளது.

இதனிடையே கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,700ஐ கடந்துள்ளது.

பலி மற்றும் நோய்த்தொற்று எண்ணிக்கை சீனாவில் குறிப்பாக வுஹான் மாகானத்தில் தான் அதிகம் உள்ளது. சீனாவை தொடர்ந்து தென் கொரியாவில் தான் கொரோனா வைரஸ் அதிக பேரை பாதித்துள்ளது. அங்கு 970 பேர் இதுவரை பாதித்துள்ள நிலையில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

இதே போல ஐரோப்பாவில் அதிக அளவாக இத்தாலியில் 270 பேருக்கு நோய்த்தொற்றும், 10 பேர் பலியாகியுள்ளனர். ஈரானில் 14 பேர் பலியாகியுள்ளனர்.

திடீரென பெருமளவில் கட்டுப்படுத்த இயலாத வகையில் உருவெடுக்கும் தொற்று நோய் பரவலை உலகம் பரவு நோய் (Pandemic) என்று மருத்துவத்துறையினர் அழைக்கிறார்கள். தற்போது Epidemic வகையை சேர்ந்ததாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பை Pandemic என அறிவிப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் தயாராகிவருவதாகவும் கூறப்படுகிறது.




தீவிரமாகும் கொரோனா வைரஸ்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு