10,May 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

சிஏஏ பத்தி மோடி கிட்ட பேசல ஆனா... பிரஸ் மீட்டில் ட்விஸ்ட் வெச்ச ட்ரம்ப்!!

பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பின்போது, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) பற்றி எதுவும் பேசவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டெல்லியில் இன்று (பிப்ரவரி 25) மாலை 5:30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். ட்ரம்ப் அளித்த பதில்களின் விவரம்:

அமெரிக்க அதிபர்கள் பலர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். ஆனால், எனக்கு இங்கு அளிக்கப்பட்டு வரும் வரவேற்பை போல, வேறு யாருக்கும் வரவேற்பு அளிக்கப்படவில்லை என்பதை எண்ணி பெருமை கொள்கிறேன். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் உயரதிகாரி ஒருவர், இதனை என்னிடம் கூறியபோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

ஐஎஸ் பயங்கரவாதத்தை உலக நாடுகள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இந்தியா வலிமையான நாடு. பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் திறமை இந்தியாவிடம் உள்ளது. இந்தியாவின் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் உதவ அமெரிக்கா எப்போதும் தயாராக உள்ளது.

இருதரப்பு உறவு, ஒப்பந்தங்கள், பாதுகாப்பு - ட்ரம்ப், மோடி பேட்டியின் முழு விவரம் இதோ!

இதேபோன்று, பாகிஸ்தானும் இந்தியாவுக்கு உற்ற நண்பன் தான். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா இப்போதும் தயாராக உள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது, தெற்காசியாவின் அமைதி குறித்தும், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாத்தை ஒழிப்பது குறித்தும் தீவிரமாக ஆலோசனை நடத்தினோம்.

அதேசமயம், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து, மோடியுடன் பேச விரும்பவில்லை. இந்த விஷயத்தில் இந்திய அரசு, மக்களுக்கு நல்லது செய்திருக்கும் என்று நம்புகிறேன். ஆனால், மத சுதந்திரம் குறித்து மோடியிடம் கேட்டறிந்தேன். அதற்கு, இந்தியாவில் மத சுதந்திரம் சிறப்பாகவே இருக்கிறது என மோடி தன்னிடம் கூறினார்.

டெல்லியில் நடைபெற்றுவரும் வன்முறைகள் குறித்து கேள்விப்பட்டேன், ஆனால், இந்த விவகாரம் உள்நாட்டு பிரச்சனை என்பதால், அதுகுறித்தும் மோடியுடம் பேசவில்லை. ஹெச்1 பி விசா விவகாரம் குறித்தும் மோடியிடம் ஆலோசித்தேன்.

உலக அளவில் மிகப்பெரிய வணிக சந்தையாக இந்தியா விளங்குகிறது. இந்தியா -அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் 2020 ஆம் ஆண்டு, மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.




சிஏஏ பத்தி மோடி கிட்ட பேசல ஆனா... பிரஸ் மீட்டில் ட்விஸ்ட் வெச்ச ட்ரம்ப்!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு