02,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

சீனா பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்த அமெரிக்கா இந்தியா ஒப்பந்தம்

டெல்லியில் அமெரிக்கா இந்தியா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமார் 21 ஆயிரம் கோடிக்கான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் இதன்மூலம் பாதுகாப்புத் துறையில் இந்தியா அதி வல்லமை பொருந்திய நாடாக மாறும் நிலை உருவாகியுள்ளது .

இந்நிலையில் இந்தியா அமெரிக்காவுக்கு இடையேயான இந்த கூட்டு ஒப்பந்தம் சீனா பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது .

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் , டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இதன்போது இருநாட்டு தலைவர்களும் பல்வேறு துறை விவகாரங்கள் குறித்து பேசினார் , பேச்சுவார்த்தையின் இறுதியில் வர்த்தகம் ராணுவம் மற்றும் இரு நாட்டு உறவுகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கபட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக இந்திய அமெரிக்க இடையே எரி சக்தி உள்ளிட்ட மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின , அதேபோல் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் 300 கோடி டாலர் அதாவது 21,606 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது .

இதன் மூலம் அமெரிக்காவின் அப்பாச்சி மற்றும் எம்எச் 60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட நவீன ராணுவ உபகரணங்கள் இந்திய ராணுவத்திற்கு வாங்கப்படும் .

நாட்டின் பாதுகாப்புக்காக அதிநவீன ஆயுதங்களை உருவாக்கி உள்ளதாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில் அதிநவீன பாதுகாப்பு கருவிகளை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது .

அதேபோல் பயங்கரவாதத்திற்கு எதிராக அதிநவீன ஆயுதங்களை இந்தியா பயன்படுத்த அமெரிக்கா உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது .

எம்எச் 60 ரோமியோ வகையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்தக்கூடிய சிறப்புகள் கொண்டது ஆகும் . நீண்ட நேரம் பறக்கும் ஆற்றல் வாய்ந்த இந்த ஹெலிகாப்டர் மூலம் கடற்படையை வலிமை படுத்த முடியும் .

இந்நிலையில் அமெரிக்காவுடன் பாதுகாப்பு துறையில் இன்று செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் இந்திய ராணுவத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .




சீனா பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்த அமெரிக்கா இந்தியா ஒப்பந்தம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு