09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

அழகியா வெற்றிப்பெற்று சாதனை படைத்த இளம்பெண்ணை

சமூகத்தில் நிலவிவரும் பல பிரச்சினைகளில் உருவக்கேலியும் ஒன்றாக உள்ளது. இப்படி உருவக்கேலிக்கு உள்ளாகி மனமுடைந்த இளம்பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். 

பிரிட்டனைச் சேர்ந்த ஜென் ஆத்கின் என்ற இளம்பெண்ணை அவரது காதலன் குண்டாக இருப்பதாகக் கூறி நிராகரித்துள்ளார். இதனால் கடுமையான மன அழுத்தத்திற்கும், வேதனைக்கும் உள்ளான ஜென் ஆத்கின், அதிகமாக சாப்பிட ஆரம்பித்துள்ளார். இதனால் அவருடைய உடல் எடை இன்னும் அதிகரித்துள்ளது. இதனால் அவரது உடல்நிலையும் பாதிக்க ஆரம்பித்துள்ளது. ஜென் ஆத்கின் இந்த கவலைக்குரிய நிலையை பார்த்த அவரது நண்பர்கள் சிலர் அவரக்கு ஊக்கம் அளித்துள்ளனர். மேலும் காதல் பிரிவானல் ஏற்பட்ட சோகத்தில் இருந்து வெளியவருதற்கு ஆலோசனையும் வழங்கியுள்ளனர்.

தனது மனதும், உடலும் பாதிக்கப்படுவதை உணர்ந்த ஜென் ஆத்கின், அவரது வாழ்க்கையை மாற்றியமைக்க முடிவுசெய்தது மட்டுமல்லாது இது போல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தூண்டுதலாகவும் இருக்க முடிவு செய்துள்ளார். இதனால் தனது உடல் எடையை குறைக்க அனைத்து விதமான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டுள்ளார். இதற்காக உடற்பயிற்சி செய்வது, உணவு கட்டுப்பாடு போன்று பல முயற்சிகளை மேற்கொண்டார். இதற்கு நல்ல பலன் கிடைத்ததால் மாடலிங் மற்றும் அழகி போட்டியிலும் ஜென் ஆத்கின் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதனால் 108 கிலோவில் இருந்த அவரது எடை 50 கிலோவாக எடை குறைந்துள்ளார்.

அதனால் பிரிட்டனில் நடைபெற்ற மிஸ் பிரிட்டன் அழகிப்போட்டியிலும் ஜென் ஆத்கின் கலந்து கொண்டார். அதில் கலந்து கொண்டது மட்டுமின்றி ஆளுமைக்கான பரிசையும் வென்று, மிஸ் பிரிட்டன் என்ற டைட்டில் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை வெற்றி குறித்து பகிர்ந்து கொண்ட அழகி ஜென் ஆத்கின், இந்த வெற்றி ஒரு நாளிலோ அல்லது சில வாரங்களிலோ வந்துவிடவில்லை எனவும் இதற்காக 2 வருடங்கள் தொடர்ந்து விடா முயற்சியோடு கடினமாக உழைத்ததாகவும் கூறினார்.

மேலும் அவரை நிராகரித்துச் சென்ற காதலனை பற்றி கூறிய ஜென் ஆத்கின், அந்த காதல் நிறைவேறாமல் போனது நல்லது தான் எனவும், வெளிப்புற அழகைவிட ஒருவரின் மனதும் ஆளுமையுமே முக்கியம் எனவும் கூறினார். மேலும் தான் உடல் எடை குறைந்து பிரிட்டனின் அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் மனதளவிலும் ஆளுமையிலும் எந்த மாற்றமும் இல்லை எனக் கூறினார். மேலும் இந்த வெற்றியை அடைய உதவிய அனைவருக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்த அவர் தன்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உறுதுணையாகவும் தூண்டுதலாகவும் இருக்கப்போவதாக கூறினார்.




அழகியா வெற்றிப்பெற்று சாதனை படைத்த இளம்பெண்ணை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு