15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

சிபிஐ அலுவலகத்தில் இயக்குநர் ஷங்கர்..!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவரும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர்.

படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, நடிகர் கமல் ஹாசன் மற்றும் ஷங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து இயக்குநர் ஷங்கர், சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விபத்து தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை நடத்தினர்.

படிபிடிப்பு தளத்தில் ஊழியர்களில் பாதுகாப்பை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர்களுக்கான காப்பீடை பெற வேண்டும் எனவும் நடிகர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் கமல் ஹாசனின் கருத்திற்கு லைகா நிறுவனம் பதில் அளித்திருந்தது. அதில் படபிடிப்பு தளத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும், இந்தியன் - 2 படபிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து எதிர்பாராதவிதமாக நிகழ்ந்தது எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் படத்தில் இயக்குநர் மற்றும் நடிகர் கமல் ஹாசனுக்கு சம்மன் அனுப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




சிபிஐ அலுவலகத்தில் இயக்குநர் ஷங்கர்..!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு