09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

கொரோனா கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் – உலக சுகாதார ஸ்தாபனம்!

கொரோனா வைரஸ் கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஜிப்ரியிஸஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா கிருமித்தொற்று நாட்டைப் பாதிக்காது என எந்த நாடும் தவறாக எண்ணக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சீனாவுக்கு வெளியே இத்தாலியில் மேலும் 650 பேர் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உலக நாடுகள் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என உலக சுகாதார நிறுவன அவசரகாலச் சேவையின் இயக்குநர் ரிக் பிரென்னன் தெரிவித்துள்ளார்.





கொரோனா கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் – உலக சுகாதார ஸ்தாபனம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு