இத்தாலியிலும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 17பேர் உயிரிழந்துள்ளதாக, இத்தாலிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, வெறும் 24 மணி நேரத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்து தற்போது 650ஆக உள்ளது.
லோம்பார்டி பிராந்தியத்தில் உள்ள 400 இற்க்கும் மேற்பட்டோர் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதான தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 250 பேர் தற்போது மருத்துவமனையில் உள்ளதாகவும், இதில் 56 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்று அசுர வேகத்தில் பரவிவருவதால், ஐரோப்பிய நாடுகளில் அவசர நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தது 11 ஐரோப்பிய நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதனை உறுதிப்படுத்தியுள்ளன.













0 Comments
No Comments Here ..