12,May 2024 (Sun)
  
CH
விளையாட்டு

2வது டெஸ்டில் இஷாந்த் சர்மா பங்கேற்பதில் சிக்கல்

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி நாளை கிரைஸ்ட்ச்ர்ச் மைதானத்தில் நாளை 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது. முன்னதாக டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, ஒரு நாள் தொடரை இழந்தது. 

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் நாளை 2வது டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கிறது.

முதல் டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் பெரியளவில் சோபிக்கத்தவறிய நிலையில் 5 விக்கெட்கள் எடுத்து நியூசிலாந்து அணிக்கு குடைச்சல் கொடுத்தவர் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா

இந்தியாவின் பலமாக திகழும் இஷாந்த் சர்மா நாளை தொடங்க இருக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த மாதம் ரஞ்சி போட்டியின் போது டெல்லி அணிக்காக விளையாடிய இஷாந்த் சர்மாவுக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டிருந்தது. பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்காக அவர் களமிறங்கிய நிலையில் தற்போது மீண்டும் அவரின் கணுக்காலில் வலி ஏற்பட்டுள்ளதால் இன்றைய தினம் அவர் வலைப்பயிற்சியில் ஈடுபடாமல் இருந்து வருவதாகவும் அவர் நாளைய போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்றும் தெரியவந்துள்ளது.

இஷாந்த் சர்மா பங்கேற்காமல் போனால் அது இந்திய அணிக்கு மேலும் பலவீனத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக உமேஷ் யாதவ் அல்லது நவ்தீப் சைனி ஆகியோர் ஆடும் லெவனில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார்கள்.

கடந்த டெஸ்டில் எடுத்த 5 விக்கெட்களையும் சேர்த்து டெஸ்ட் போட்டிகளில் இதுவரை மொத்தம் 297 விக்கெட்கள் வீழ்த்தியிருக்கிறார் இஷாந்த் சர்மா. இந்தியாவுக்காக 300 விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் இஷாந்த் சர்மா இடம்பிடிக்க மேலும் 3 விக்கெட்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் நாளைய போட்டியில் அவர் விளையாடாமல் போனால் அந்த சாதனை படைக்க அவர் மேலும் சில காலம் காத்திருக்க வேண்டியுள்ளது.

அதிக டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பவுலர்கள்:

1. அனில் கும்பிளே (619)

2. கபில் தேவ் (434)

3. ஹர்பஜன் சிங் (417)

4. அஸ்வின் (365)

5. ஜாகீர் கான் (297)

6. இஷாந்த் சர்மா (297)




2வது டெஸ்டில் இஷாந்த் சர்மா பங்கேற்பதில் சிக்கல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு