23,Nov 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

ஜனநாயகக் கட்சி EPDP உட்பட மேலும் 5புதிய கட்சிகளை இணைத்துக்கொள்ள முடிவு

பிரதமர் மகிந்த ராஜபக்சவை தலைவராகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசெனாவை தவிசாளராகவும் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி EPDP உட்பட மேலும் 5புதிய கட்சிகளை இணைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணியின் முதல் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் அலரி மாளிகையில் நடந்போதே இந்த முடிவு எட்டப்பட்டது.

இந்தக் கூட்டமைப்பில் ஒன்பது பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தற்போது உள்ளதாகவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இணைந்து செயற்பட்ட இதர கட்சிகளையும் சேர்த்துக் கொள்ள தாம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இந்த கூட்டமைப்பின் செயலாளர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

புதிய கூட்டணி வலிமையான அரசியல் பயணத்திற்காக செயற்படுவதாகவும் வரும் பாரளமன்ற தேர்தலில் இது மொட்டு சின்னத்திலேயே போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி ஒன்பது பிரதான கட்சிகள் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியில் மேலும் ஐந்து புதிய அரசியல் கட்சிகளை உள்ளடக்குவதற்கான பிரேரணைக்கு நிறைவேற்றுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.இதன்படி 14 கட்சிகள் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கவுள்ளன..

புதிதாக இனைத்துக்கொள்ளப்படும் ஐந்து கட்சிகளில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி EPDP, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்CWC, தமிழ் மக்கள் விதலைப் புலிகள் TMVP என்பன உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.




ஜனநாயகக் கட்சி EPDP உட்பட மேலும் 5புதிய கட்சிகளை இணைத்துக்கொள்ள முடிவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு