அதிகரிக்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாளை முதல் ஐக்கிய அமீரகத்தில் செயல்படும் சிறார் பாடசாலைகள் அனைத்தும் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஐக்கிய அமீரகத்தில் இதுவரை 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஐவர் நோய் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சரகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய அமீரகத்தில் செயல்பட்டுவரும் சிறார் பாடசாலைகள் அனைத்தும் மார்ச் 1-ஆம் திகதி முதல் மூடப்படுவதாக அரசு தரப்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மறு அறிவிப்பு வரும் வரை, பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் என சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,
நாடு தழுவிய அல்லது வெளிநாடுகளில் உள்ள அனைத்து மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளை ரத்து செய்து சுற்றறிக்கை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..