28,Apr 2024 (Sun)
  
CH

டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி சிறப்பு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடியது இன்று மெல்போர்னில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அணி அபார வெற்றிபெற்றது.

டி20 மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது. இலங்கை அணி, தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து, இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது.

இன்று மெல்போர்னில் நடைபெற்ற Group A லீக் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட் செய்தது, 9 விக்கெட்களை இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்தது இலங்கை அணி. இலங்கை அணியின் சாமரி அத்தபத்து அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இந்திய தரப்பில், ராதா யாதவ் 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர்.

சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டை வீழ்த்திய ராதா யாதவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது




டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி சிறப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு