ஒன்ராறியோவில் ஏழாவது நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஈரானுக்கு பயணம் செய்த 50 வயதிற்குட்பட்ட ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை ரொறன்ரோவின் சன்னிபுருக் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்ற அவருக்கு ‘நிறுவப்பட்ட தொற்று தடுப்பு’ திட்டத்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு அதே நாளில் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒன்ராறியோவில் தற்போது நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மற்றைய மூன்று பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கனடாவில் ஒட்டுமொத்தமாக 14பேர் கொரோனா வைரஸ் தொற்றுக் இலக்காகியிருந்ததாகவும், இதில் கியூபெக்கை சேர்ந்த ஒருவரும், ஏழு பேர் பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்தவர்கள் அடங்குவதாகவும் ஒன்ராறியோ சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..