துருக்கி- கிரேக்க எல்லையில் நிர்கதியாகத் தவித்து வரும் புலம்பெயர்ந்த மக்களும், கிரேக்க பொலிஸாருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.
இருதரப்புக்கும் இடையே இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மோதலில், சிலர் காயமடைந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வடக்கு சிரியாவில் 33 துருக்கிய துருப்புக்கள் இறந்ததைத் தொடர்ந்து அகதிகள் ஐரோப்பாவிற்குள் செல்வதைத் தடுக்க மாட்டோம் என்று துருக்கிக் கூறியதையடுத்து கிரேக்கம் தன் எல்லையை அகதிகளுக்கு மூடியது. இந்த நிலையிலேயே இந்த மோதல் வெடித்துள்ளது.
மேற்கு துருக்கி மாகாணமாக எடிர்னெ அருகே கிரேக்கம் எல்லையில் நிர்கதியாகத் தவித்து வரும் புலம்பெயர்ந்த மக்கள், எல்லை ஊடாக நுழைவதற்கு முற்பட்டபோது, புலம்பெயர் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இந்த மோதல் வெடித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதில் புலம்பெயர்ந்தோரில் சிலர் பொலிஸ் அதிகாரிகள் மீது கல்லெறி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து கிரேக்க பொலிஸார், மக்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீதி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்ற நிலை நிலவுகின்றது.
துருக்கிய தலைவர் நேற்று முதல் 18,000 புலம்பெயர்ந்தோர் ஐரோப்பாவுடனான துருக்கிய எல்லைகளில் குவிந்துள்ளனர் என்றும், இந்த எண்ணிக்கை இன்று 30,000 வரை எட்டக்கூடும் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..