நாடாளுமன்ற மேலவை எனப்படும் மாநிலங்களவையில் மொத்தமுள்ள 250 எம்.பி.க்களில் மகாராஷ்டிரா, பிகார் உள்ளிட்ட 17 மாநிலங்களவைச் சேர்ந்த 55 எம்.பி.க்களின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதில், திமுக, அதிமுக கட்சிகளைச் சேர்ந்த 6 எம்.பி.க்களின் பதவிக் காலமும் நிறைவடைய உள்ளது.
காலியாக உள்ள ராஜ்யசபா எம்.பி. சீட்களை நிரப்புவதற்கான மாநிலங்களவைத் தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான திமுக வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அக்கட்சி நிர்வாகம் இன்று (மார்ச் 1) வெளியிட்டுள்ளது.
திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ். என்.ஆர். இளங்கோ ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..