22,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

இரண்டு இலங்கையர்கள் காய்ச்சல் அறிகுறி காரணமாக மருத்துவமனையில்

தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பி இரண்டு இலங்கையர்கள் காய்ச்சல் அறிகுறி காரணமாக நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 35 மற்றும் 37 வயதுகளை உடைய இருவர் கொரியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் கட்டுநாய்ய விமானநிலையத்தில் வைத்து நோயாளர் காவு வண்டியில் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

 கொரியா விமான சேவைக்கு சொந்தமாக ஈ.கே.473 என்ற விமானத்தில் 182 பேர் இலங்கைக்கு வருகை தந்ததோடு அவர்களில் 137 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக விமான நிலையத்திலுள்ள எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

 நோய்நிலை குறித்து ஆராயும் கருவி ஊடாக விமான நிலையத்திற்கு வருகை தரும் அனைவரும் அவதானிக்கப்படுவதாக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திலுள்ள மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 இதனடிப்படையிலேயே அவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 தென்கொரியாவில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது.

 இந்தநிலையில் தென்கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள கட்டுநாய்ய விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 இதனையடுத்து கொவிட்-19 தொற்று இலங்கைக்கு பரவாமல் இருப்பதை தடுப்பதற்காக கட்டுநாயக்க விமானநிலைய வளாகத்தில் புதிய செயற்திட்டங்கள் எதிர்வரும் நாட்களுக்குள் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.




இரண்டு இலங்கையர்கள் காய்ச்சல் அறிகுறி காரணமாக மருத்துவமனையில்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு