தமிழ் சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது தனக்கும் நடந்ததாக நடிகை வரலட்சுமி கூறிய நிலையில், அதனை ராதிகா சரத்குமார் ஆமோதித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களில் பலர் இருந்தாலும் கூட அவர்களில் மிகவும் தைரியம் மிகுந்தவர்களாக என்ன நடந்தாலும் அது தன் குடும்ப நபர்களாக இருந்தாலும் கூட வெளிப்படையாக பேசக் கூடிய நடிகைகளில் மிக முக்கியமானவர் வரலட்சுமி.
தொடர்ந்து அவர் பெண்கள் மீதான பல அவலங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். சக்தி என்ற பெண்களுக்கு பாதுகாப்பான அமைப்பையும் நடத்தி வருகிறார். #MeeToo-க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இவர், ஒரு மீடியாக்கு அளித்த பேட்டியில் தனக்கு நடந்த பாலியல் சீண்டல்களுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் தன்னிடம் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..