திரைத்துறை பிரபலமாக வலம் வரும் ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது, பண வசதி இல்லாத ஏழைக் குழந்தைகளுக்கு மருத்துவம், கல்வி வசதிகள் செய்தி தருவது உள்ளிட்ட சமூகநலத்திட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த அறக்கட்டளை தற்போது 15-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்நிலையில் வீடில்லாத திருநங்கைகளுக்கு வீடு கட்டித் தரும் பணியை தொடங்கியுள்ளது லாரன்ஸ் அறக்கட்டளை. இதற்காக லக்ஷ்மி பாம் படப்பிடிப்பின் போது நடிகர் அக்ஷய்குமாரிடம் தனது முயற்சியை தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ். உடனே ரூ.1.5 கோடி நிதி கொடுப்பதாக அக்ஷய்குமார் கூறியுள்ளார். இத்தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ராகவா லாரன்ஸ், உதவி செய்பவர்கள் அனைவரும் கடவுள் தான். அந்த வகையில் எங்களுக்கு அக்ஷய்குமாரும் கடவுள் தான். இத்திட்டத்துக்கு உதவிய அவருக்கு நன்றி. திருநங்கைகளுக்கு வீடு கட்டித் தரும் இத்திட்டத்தை இந்தியா முழுக்க அக்ஷய்குமாரின் ஆதரவோடு எடுத்துச் செல்வோம். விரைவில் பூமி பூஜை தேதி அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..