நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் ஒருவரான பவன் குப்தாவின் கருணை மனு நிலுவையில் உள்ளதால் நாளை தூக்கிலிடப்பமாட்டார்கள் என டெல்லி விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தற்போது எஞ்சியுள்ள முகேஷ் சிங், அக்ஷய் குமார், வினய் சர்மா, பவன் குப்தா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நான்கு குற்றவாளிகளும் மரண தண்டனையை எதிர்த்து மாறி மாறி மனுக்களை அளித்து வந்தனர்.
இதனால் ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தேதி தள்ளிக்கொண்டே சென்றது. இந்த நிலையில் நாளை (மார்ச் 3 ) 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கான பணிகளை திகார் சிறை தீவிரமாக மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா மரண தண்டனையை தடை செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு கருணை மனுவை அனுப்பி வைத்தார். அந்த மனு தற்போது நிலுவையில் இருப்பதால் அதற்கான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன் காரணமாக நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் நாளை காலை தூக்கிலிடப்பட மாட்டார்கள் என நீதிமன்றம் தெரிவித்ததோடு, மறு உத்தரவு வரும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..