26,Apr 2024 (Fri)
  
CH
சுவிஸ்

கொரோனாவால் சுவிஸ் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட துயரம்

சூரிச் நகரில் ஓடும் ரயிலில் ஆசிய நாட்டவர் என கருதி சுவிஸ் இளம்பெண் ஒருவர் இன ரீதியாக அவமதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் ஆசிய நாட்டவர்கள் பலருக்கு இன ரீதியான அவமதிப்புகள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் சமீப நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வியாழனன்று சூரிச் நகரில் இருந்து ப்ரக் சென்ற ரயிலில் 23 வயதான சுவிஸ் இளம்பெண்ணிற்கு அதுபோன்ற ஒரு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிறகு தாம் இரண்டு மணி நேரம் அழுததாக கூறும் அவர், வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை இதுவரை எதிர்கொண்டதில்லை என தெரிவித்துள்ளார்.

Roan Steiner என்பவர் சம்பவத்தன்று அந்த ரயிலில் பயணம் செய்துள்ளார். நிரம்பி வழிந்த அந்த ரயிலில், காலியாக இருந்த இருக்கையில் இவர் சென்று அமர்ந்துள்ளார்.

ஆனால் அதன் அருகாமையில் இருந்த நபருக்கு இது பிடிக்கவில்லை. அவர் உடனடியாக மருத்துவ முகமூடி ஒன்றை அணிந்துவிட்டு, இவரை விசித்திரமாக ஒரு பார்வை பார்த்துள்ளார்.

பின்னர் தமது மொபைல்போனால் இவரது புகைப்படத்தை பதிவு செய்ததுடன், இவரது முகத்திற்கு நேரே தமது கைகளை சுத்தம் செய்துள்ளார்.

மட்டுமின்றி, Roan Steiner பார்வையில் படும்படி, தமது மொபைலில் கொரோனா வைரஸ் தொடர்பில் தகவல் சேகரிக்கவும் தொடங்கியுள்ளார். 

இந்த நடவடிக்கைகளால் நொந்து போன Roan Steiner, அவரிடம் நான் இங்கே அமர்ந்திருப்பது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருதினால், நான் வேறு பகுதிக்கு செல்லவா என வினவியுள்ளார்.

ஆனால் அதற்கு பதிலளித்த அந்த நபர், இன ரீதியாக குற்றச்சாட்டு வைப்பதாக தெரிவித்துள்ளார். அவர் பேசிய ஆங்கிலம் இவருக்கு சரியாக விளங்கவில்லை என கூறும் Roan Steiner,

அவர் ஸ்காட்லாந்து நாட்டவர் எனவும், சுவிஸில் தங்கி பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, தமது தாயார் பிலிப்பைன்ஸ் நாட்டவர் என்றாலும், தமது தந்தை சுவிஸ் நாட்டவர் எனவும்,

இதுபோன்ற ஒரு சூழல் வாழ்க்கையில் இதுவரை தாம் எதிர்கொணது இல்லை எனவும் Roan Steiner கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.




கொரோனாவால் சுவிஸ் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட துயரம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு