18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

ஜனாதிபதி விசாரணைக்குழுவில் ஷானி அபேசேகர இன்று முன்னிலை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணைக்குழுவில் இன்று முன்னிலையாகவுள்ளார்.

இதற்கமைய, இன்று காலை 10.00 மணியளவில் அவர் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிக் காவல்துறை அத்தியட்சகர் பி.எஸ் திசேரா மற்றும் காவல்துறை இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வா ஆகியோரும், குறித்த விசாரணைக் குழுவில் முன்னிலையாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் தன்னை கைது செய்ததன் ஊடாக, தனக்கு அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக, ரியர் அட்மிரல் டி.கே.பி தஸநாயக்க, அண்மையில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணைக்குழுவில் சாட்சியம் வழங்கும் போது கூறியிருந்தார்.


 தன் மீது சுமத்த்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் தொடர்புள்ளதாக கூறுமாறு, தனக்கும் தன்னுடைய மனைவிக்கும், காவல்துறை இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வா அச்சுறுத்தல் விடுத்ததாக ரியர் அட்மிரல் டி.கே.பி தஸநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார். இந்த நிலையிலேயே, இது குறித்து ஆராய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி விசாரணைக்குழுவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர்




ஜனாதிபதி விசாரணைக்குழுவில் ஷானி அபேசேகர இன்று முன்னிலை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு