சமகி ஜனபல வேகய எனப்படும் ஐக்கிய மக்கள் சக்தியின் அங்குராட்பண நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு சென்று விடுத்த அழைப்பு இதுவரை கலாவதியாகவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் செயற்பாட்டு காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த காரியாலயம் எத்துல் கோட்டை பகுதியில் உள்ள ஈ.டபிள்யு பெரேரா மாவத்தை என்ற விலாசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இந்த காரியாலயம் திறக்கப்பட்டது.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.













0 Comments
No Comments Here ..