19,Apr 2024 (Fri)
  
CH
சுவிஸ்

அனைத்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன!

இன்று இடம் பெற்ற ஊடக மாநாட்டில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஏப்ரல் 4 வரை எந்த வகுப்புகளும் நடைபெறக் கூடாது என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

கூடுதலாக, 100 க்கும் மேற்பட்ட நபர்களுடன் பொது அல்லது தனியார் நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

ஒரு நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவகங்கள், பார்கள் மற்றும் களியாட்ட விடுதிகளிற்கு செல்லக் கூடாது என்ற தகவலை வெளியிட்டுள்ளது.

ஆபத்தான நாடுகள் மற்றும் பகுதிகளிலிருந்து நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது.

எல்லைக் கட்டுப்பாடுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இத்தாலி தற்போது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து உள் எல்லைகளிலும் உள்ள எல்லைக் கட்டுப்பாடுகள் தற்போதும் நடைமுறையில் உள்ளது.

நிலைமையைப் பொறுத்து மீண்டும் நிலமைகள் தொடர்பில் தெரிவிக்கப் படும் என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஊடக மாநாட்டில் மேலும் அறியப்படுத்தியுள்ளது.

இத்தாலியில் இருந்து நுழைவது மேலும் தடை நீடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று பிற்பகல் சுவிற்சர்லாந்து மத்திய அரசு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் அரச பள்ளிகள் 2020 ஏப்ரல் மாதம் 4 ஆம் நாள்வரை நடைபெறமாட்டாது என அறிவித்துள்ளதை அடுத்து சுவிட்சர்லாந்தில் இயங்கி வந்த அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் நாளைமுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை உறுதிப்படுத்தியுள்ளது.





அனைத்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு