கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 103 பேர் நாட்டில் உள்ள 15 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அதில் 35 பேர் ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர 16 பேர் குருநாகல் போதனா மருத்துவமனையிலும் 13 பேர் கம்பஹா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 5 பேர் தொடர்ந்தும் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடுவதற்கு கலாசார அமைச்சு தீர்மானித்துள்ளது.
எனினும் மேடை நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் தொடர்பில் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் கலாசார அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிசந்ர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்று பரவியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 4 போலந்து நாட்டு பிரஜைகள் ஐ.டி.எச் மருத்துவமனைக்கு அனுப்பபட்டுள்ளனர்.
குறித்த நான்கு பேருக்கும் கொரோனா ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நான்கு பேரும் சுற்றுலா செல்லும் நோக்கில் கடந்த 26 ஆம் திகதி நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தியாவிற்கு அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த டயமன்ட் பிரின்சஸ் கப்பலில் பணிபுரிந்த இரண்டு இலங்கையர்களுக்கும் கொவிட் 19 தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டு அவர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தென்கொரிய, இத்தாலி மற்றும் ஈரான் நாடுகளில் இருந்து நாடு திரும்பிய ஆயிரத்து 631 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நி













0 Comments
No Comments Here ..