20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

கொரோனாவை கட்டுப்படுத்த கிருமிநாசினிகள் தெளிக்க நடவடிக்கை

உலகையே அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸ் தற்பொழுது , இலங்கையிலும் பரவத்தொடங்கியுள்ளது.கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுப்பதற்காக இன்று முதல் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ், ரயில்களில் கிருமிகளை அழிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.இந்த நடவடிக்கை பாதுகாப்பு பிரிவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்தவகையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் மற்றும் புறக்கோட்டை பஸ் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கைகளைக் கழுவுவதற்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இன்று முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்த வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.





கொரோனாவை கட்டுப்படுத்த கிருமிநாசினிகள் தெளிக்க நடவடிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு