08,May 2024 (Wed)
  
CH
ஆரோக்கியம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில உணவுகள்!

இன்று வேகமாக பரவி வருகின்ற கொடிய கொரோனா வைரஸ் நோயை எதிர்த்து போராட நோய் எதிர்ப்பு சக்தி முக்கியமானது ஒன்றாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாவிடின் இதுபோன்ற நோய்கள் எளிதில் நம்மை வந்து தாக்கி விடுகின்றது.

இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்தைவிட சில உணவு முறைகளை எடுத்து கொண்டால் போதும் இதிலிருந்து எளிதில் குணமடைய முடியும்.

அந்தவகையில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகள் என்னென்ன என்பதை பற்றி  பார்ப்போம்.

மஞ்சள் பட்டாணி, கொண்டைக்கடலை, நிலக்கடலை, பாதாம் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பருப்பு வகைகள்.

மீன், சிக்கன், முட்டை, பால்

சிட்ரிக் அமிலம் அதிகமுள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்கள்.

பீன்ஸ், வெண்டைக்காய், பாகற்காய் போன்ற பச்சை நிறக் காய்கறிகள் அனைத்தும்.நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் புரோபயாட்டிக் பாக்டீரியா அதிகமுள்ள தயிர் மற்றும் பசும்பால்.

பெரிய நெல்லிக்காய், கொய்யாப்பழம் மற்றும் ஆப்பிள் போன்றவை இவற்றிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.

பப்பாளி, கேரட் இவற்றிலுள்ள பீட்டா கரோட்டின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.

மஞ்சள் தூள் இது மிகச்சிறந்த ஆன்டிபயாடிக் என்பதால் நோய்த் தொற்றுகளைத் தடுக்கும்.

தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்களுக்கு தவிர்க்காமல் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதிகபட்சமாக 2 வருடங்கள்வரை கொடுக்கலாம்.




நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில உணவுகள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு