27,Apr 2024 (Sat)
  
CH
குழந்தைகள்

அலைப்பேசியால் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து…..

20 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கு நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

அப்போதெல்லாம் கோலி, கில்லி, கிரிக்கெட், பல்லாங்குழி போன்ற பல விளையாட்டுகளை குழந்தைகள் விளையாடினார்கள்.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பிறந்த குழந்தைகள் அனைவரின் கைகளில் செல்போன் மட்டுமே தவழ்கிறது.

இந்த காலக்கட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் 3 வயதிலேயே அதிக அறிவுத்திறமை பெற்றாலும் தொழில்நுட்பத்தாலும் பல பிரச்சினைகளை சந்திக்கத்தான் நேரிடுகிறது.

நீண்ட நேரம் குழந்தைகள் செல்போனை பார்ப்பதால் ஏற்படும் தீமைகள்

அதிக நேரம் செல்போனை பார்ப்பதால் ஓடி, ஆட மறந்து விடுகிறார்கள்.

ஒரே இடத்தில் செல்போனை பார்ப்பதால் உடல் பருமன் ஏற்படுகிறது.

நீண்ட நேரம் செல்போனை பார்ப்பதால் செல்போனிலிருந்து வரும் கதிர் வீச்சு குழந்தைகளின் கண் பார்வையை பறிக்கிறது.

இரவு நேரங்களில் குழந்தைகள் செல்போனை பயன்படுத்துவதால் குறித்த நேரத்தில் பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடிவதில்லை.

இரவு முழுவதும் செல்போனை பார்ப்பதால் பள்ளிக்கூடத்தில் வகுப்பறைகளில் குழந்தைகள் தூங்கி விடுகிறார்கள்.

செல்போனை தொடர்ந்து பார்ப்பதால் கண் எரிச்சல், தலை வலி போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன.

செல்போனை பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு மிக விரைவில் எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது.

தடுக்கும் வழிகள்

செல்போனை குழந்தைகளுக்கு கொடுக்காமல் வெளியே விளையாட அனுமதியுங்கள்.

செல்போனை தொடர்ச்சியாக பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். இடைவெளி விட்டு செல்போனை கொடுங்கள்.

செல்போன் பயன்படுத்தும் குழந்தைகளின் கழுத்து குனிந்தபடி இருக்க விடாதீர்கள்.

குழந்தைகளுக்கு செல்போன் கையில் கொடுக்கும் முன்பு அதனை ஏரோ பிளைன் மோடில் போட்டு கொடுங்கள். இதனால் கதிரியக்க பாதிப்பிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம்.




அலைப்பேசியால் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து…..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு