கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் புள்ளிவிவரங்கள் பெண்களைவிட ஆண்களின் இறப்பு விகிதமே அதிகம் என்பதைக்
கொரோனா வைரஸ் பாதிப்பினால் பெண்களை விட ஆண்களே அதிகமாகப் பாதிக்கப்படவும் உயிரிழக்கவும் வாய்ப்புள்ளது என ஓர் ஆய்வு கூறுகிறது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 21 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 4.7 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் மட்டும் 2.5 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பேருக்கு மேல் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் சிலர் முழு ஆரோக்கியத்துடன் இருந்தும் உயிரிழந்துள்ளனர். ஆனால், உயிரிழப்பவர்கள் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களாகவும், நோய் எதிர்ப்புத்திறன் குறைபாடு உள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.
இப்படியிருக்க, உயிரிழப்புகளில் ஆண் - பெண் விகிதத்தைப் பார்க்கும்போது பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கே கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானதாகத் தோன்றுகிறது.
சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களில் 2.8 சதவீதம் பேர் மரணம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களில் 1.7 சதவீதம் பேர்தான் இறந்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..