21,Nov 2024 (Thu)
  
CH
உலக செய்தி

கண்ணீர் வழியாக கொரோனா வைரஸ் பரவுமா?

சிங்கப்பூர் பல்கலைக்கழக ஆராய்ச்சிளார்கள் கொரோனா நோயாளிகளின் கண்ணீரை 20 நாட்கள் சேகரித்து இந்த ஆய்வை அது கண்ணீர் மூலம் பரவுமா என ஆராய்ந்து கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ குறித்த பெரும்பாலான ஆராய்ச்சியில் அது தும்மல், இருமல் ஆகியவற்றின் மூலம் பரவும் எனக் கூறப்படுகிறது. ஆனால், கண்ணீர் போன்ற உடலிலிருந்து வெளிப்படும் பிற திரவங்களால் வைரஸ் பரவுமா என்பது உறுதியாகக் கூறப்படவில்லை.

இந்நிலையில், Ophthalmology என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை கண்ணீர் மூலம் கொரோனா வைரஸ பரவுமா என்பதைக் குறித்து ஆராய்ந்து, முடிவைத் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த தேசிய மருத்துவப் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறது. இதற்காக, 17 கொரோனா நோயாளிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுடைய கண்ணீரின் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது முதல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாள் வரை தொடர்ந்து 20 நாட்கள் இதனை சேகரித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு உள்ளவர்களில் 1 முதல் 3 சதவீதம் பேருக்கு ‘பிங்க் ஐ’ எனப்படும் விழி வெண்படல அழற்சி ஏற்படக்கூடும் எனக் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த ஆய்வு மேற்கொண்டபோது யாருக்கும் கண்ணீல் அந்த பிரச்சினை இல்லை ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.




கண்ணீர் வழியாக கொரோனா வைரஸ் பரவுமா?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு