மிருசுவில் படுகொலையில் பொதுமக்களை வெட்டியும், சுட்டும் கொன்ற கொடூர கொலையாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பளித்தது பல தரப்பிலும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
உலகளவிலும் இந்த நடவடிக்கை கண்டிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச மன்னிப்புச்சபையும் இந்த பொது மன்னிப்பை கண்டித்துள்ளது. அந்த அமைப்பின் தெற்காசியாவிற்கான பிராந்திய இயக்குனர் பிராஜ் பட்நாயக் இது குறித்து குறிப்பிட்டபோது,
இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் மிகவும் அரிதானது. சார்ஜென்ட் ரத்நாயக்காவை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவு மிகவும் கவலையான செய்தியை அனுப்புகிறது. இதன் பொருள் என்னவென்றால், இராணுவ குற்றவாளிகளின் கொடூரமான குற்றங்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலும், மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்பதே“ என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு தொற்றுநோய் சூழலை பயன்படுத்திய கொடூரமான குற்றவாளிகள் மன்னிப்பளிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக்கான உரிமை உண்டு, நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்ய கடமை இலங்கைக்கு உள்ளது“ என்றார்.
பலியானவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவர். அதில் ஐந்து வயது சிறுவனும் அடக்கம். கொல்லப்பட்டவர்கள் கழுத்தில் குத்தியும், கழுத்தை வெட்டியும் கொல்லப்பட்டிருந்தனர். இந்த கொலையை மேற்கொண்ட கொடூரன் சுனில் ரத்னாயக்கவின் விடுதலையை சர்வதேச மன்னிப்புச்சபை கண்டித்துள்ளது.
0 Comments
No Comments Here ..