ஒரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் மறுபுறம் ஐந்தாம் நிலை கொடும் புயலான ஹரோல்டு புயல் இரண்டும் தாக்குவதால் பசிபிக் பெருங்கடலில் உள்ள பல தீவு நாடுகள் நிலை தடுமாறியுள்ளன.
இந்தப் புயலால் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல நகரங்களில் வெள்ளம் சூழ்ந்தது. ஏராளமான மக்கள் வீடிழந்தனர். சாதாரண காலத்திலேயே இந்தப் புயல் ஒரு பேரழிவாக இருக்கும். இத்துடன் கொரோனாவும் சேர்ந்துகொண்டதால் ஏழ்மையான சமூகங்கள் மிகப்பெரும் பாதிப்பை சந்திக்கின்றன.
பாதிக்கப்பட்ட மக்கள் பலரை நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லவேண்டியிருக்கிற. அங்கே சமூக இடைவெளியைப் பின்பற்றுவது எளிதல்ல.
0 Comments
No Comments Here ..