24,Nov 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

மானிப்பாய் பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் கொரோனா தொற்று பாிசோதனைகள்

யாழ்.சண்டிலிப்பாய் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட 15 பேருக்கும், காரைநகா் பிரதேசத்தை சோ்ந்த ஒருவருக்குமாக 16 பேருக்கு மானிப்பாய் பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் இன்று கொரோனா தொற்று பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 15ம் திகதி யாழ்.அாியாலை தேவாலயத்தில் சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோத கா் நடாத்திய ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது கண்காணிக்கப்பட்டுவரும் 16 பேருக்கே இந்த பாிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.

இதற்காக மானிப்பாய் பிரதேசசபை கலாச்சார மண்டபம் தொற்று நீக்கம் செய்யப்பட்டு சந்தேகநபா்கள் அழைத்துவரப்பட்டு உாிய இடைவெளியில் அமா்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டு பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பாிசோதனையின் பின்னா் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் சந்தேகநபா்கள் அவா்களது இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன், கலாச்சார மண்டபம் மற்றும் பயன்படுத்தப்பட்ட தளபாடங்கள் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

மேலும் கலாச்சார மண்டபத்தை 2 நாட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு மண்டபம் பூட்டப்பட்டது.




மானிப்பாய் பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் கொரோனா தொற்று பாிசோதனைகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு