03,May 2024 (Fri)
  
CH
உலக செய்தி

கொரோனா பாதிப்பால் உள்ளுறுப்புகள் பாதிக்கும்

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தினால் நீரிழிவு நோய், இதயக்கோளாறு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட நீண்டகால நோய் பாதிப்புகள் இருப்போர், முதியோர் ஆகியோருக்குத்தான் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும், அவர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் என கருத்து நிலவி வந்தது.

ஆனால் சமீபத்திய அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வில் 30 வயது முதல் 50 வயதுக்குள் இருப்போர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகினால் உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும். சிலர் ஸ்டோரோக்கால் திடீரென எதிர்காலத்தில் உயிரிழப்பைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.

இதில் த வோஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியிலும்கூட, இளம் மற்றும் நடுத்தர வயதில் உள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் இளம்வயதிலேயே திடீரென ஸ்ட்ரோக்கால் உயிரிழக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த வயதில் இருப்போருக்கு தங்களின் உள்ளுறுப்புகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதா எனத்தெரியாமல் இருக்கும் போது திடீரென மரணம் சம்பவிக்கும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் 30 முதல்50 வயதுக்குள் இருக்கும் வயதினர் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், அவ்வாறு பாதிக்கப்பட்டாலும் தீவிர பரிசோதனை செய்வது அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

அமெரிக்காவின் பல மருத்துவமனைகளில் இளம் வயதினர் இந்த பாதிப்புகளை அடைந்துள்ளதால், கொரோனா வைரஸ் இதுபோன்ற புதிய பாதிப்புகளை ஏற்படுத்துமா என்று மருத்துவர்கள் குழப்பத்திலும் வியப்பிலும் உள்ளனர். இதுபோன்ற பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அமெரிக்காவில் குறைவாக இருந்தாலும் இளம் வயதினருக்கு பாதிப்பை ஏற்படுத்தி கொரோனா வைரஸ் மருத்துவர்களுக்கு சவாலாக மாறியுள்ளது என த வோஷிங்டன் போஸ்ட் செய்தி தெரிவிக்கிறது.

பெரும்பாலும் கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கும் போதும் அவரின் நுரையீரலுக்குத்தான் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இதுவரை ஆய்வுகளில் கண்டறியப்பட்டு இருந்தது. ஆனால், இளம் வயதினர், நடுத்தர வயதினர் பாதிக்கப்பட்டால் அவர்களி்ன் உடலின் முக்கிய உள்ளூருப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரியவந்துள்ளது

அமெரிக்காவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஸ்ட்ரோக் வந்த இளம் வயதினர் சிலர்தான் இருக்கிறார்கள் என்றாலும், சீனாவின வூஹான் நகரில் அனுமதிக்கப்பட்டிருந்த பல நோயாளிகளுக்கு திடீரென ஸ்ட்ரோக் ஏற்பட்டதும், பலர் அபாய கட்டத்துக்கு சென்றனர், பலர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த ஆய்வுகளை அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் மருத்துவ மையத்தின் பேராசிரியர் ஷெரரி சோ செய்து வருகிறார்

மேலும் இளம் வயதினர், நடுத்தர வயதினர் கொரோனாவில் பாதிக்கப்பட்டால் ஸ்ட்ரோக் வர வாய்ப்புள்ளது, திடீர் மரணம் ஏற்படலாம் என்று ஒப்புக்கொண்டு அமெரிக்காவின் முக்கிய மருத்துவமனைகள் விரைவில் அறிக்கை வெளியி்ட உள்ளன.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஸ்ட்ரோக்கைத்தான் பெரும்பாலும் சந்திக்கலாம். குறிப்பாக எல்விஓ எனப்படும் மூளைக்கு செல்லக்கூடிய இரத்தக்குழாயைப் பாதித்தல், பேச்சு, முடிவு செய்யும் திறனை பாதித்தல் போன்றவை நிகழலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இளம்வயதில், நடுத்தர வயதில் இருக்கும் பெரும்பாலான கொரோனா நோயாளிகள் உடலில் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படும் பிரச்சினைகளை அதிகமாகச் சந்திக்கலாம். இந்த இரத்த குழாய் அடைப்பால் சில நேரங்களில் மூச்சு விடுவதில் பிரச்சினையும், மாரடைப்பும் ஏற்படலாம். சில நேரங்களில் இவை இரண்டுக்கும் வாய்ப்பில்லாத நிலையில் மூளையை பாதித்து ஸ்ட்ரோக் ஏற்படும்.

அமெரிக்க மருத்துவர்கள் கூற்றுப்படி, நியூயோர்க் நகரி்ல பெரும்பாலான மக்கள் அவசர உதவிக்கு அழைத்தபோது, அவர்களை காப்பாற்ற சென்ற மருத்துவ உதவியாளர்கள் அவர்களை காப்பாற்றுவதற்குள் திடீரென ஸ்ட்ரோக் ஏற்பட்டு பலர் இறந்துள்ளனர் என்று கவலை தெரிவிக்கிறார்கள். ஆனால் அவ்வாறு இறந்தவர்களி்ன் உடல்களை உடற்கூறு செய்திருந்தால் பாதிப்பு தெரிந்திருக்கும். ஆனால் அதற்கான சூழல் அங்கு இல்லை என வோஷிங்டன் போஸ்ட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது




கொரோனா பாதிப்பால் உள்ளுறுப்புகள் பாதிக்கும்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு