11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திற்கு மத்தியில் நாடு திரும்பாது இலங்கையில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
நேற்றைய தினம் வரையில் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள தகவல்களின் அடிப்படையில் இலங்கையில் 11389 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் தங்கியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி கொவிட்-19 வைரஸ் தொற்று உலக தொற்று நோய் பரவுகையாக அறிவிக்கப்பட்ட போது சுமார் 76000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் தங்கியிருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தொடர்பில், இணைய தளத்தின் ஊடாக தகவல்கள் திரட்டப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் நோக்கில் இவ்வாறு தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..