ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் நிர்வாக முறைமையினால் இயல்பு வாழ்க்கைக்கு தடையேற்பட்டாலும் இந்த பயங்கரமான வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டத்தை கடைபிடித்து உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டு இந்த கோரிக்கையை விடுத்துள்ள ஜனாதிபதி, நாம் போராடுவது கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஹெலைய்னா டெப்லிஸ் இன்று முற்பகல் பிரதமர் மகிந்த ராஜபக்சவை, கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று நோயை ஒழிப்பது சம்பந்தமாக இதன் போது இரண்டு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.
கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் மாத்திரமல்லாது கூட்டு ஒத்துழைப்புகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..