07,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

தேர்தல் ஒத்திவைப்பிற்கு எதிராக மனுக்கள் சமர்ப்பிப்பு

நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பை தள்ளுபடி செய்யக் கோரி மேலும் எட்டு அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன், பேராசிரியர் அன்ரன் மீமன, டி.எம். பிரேமவர்தன, ஏ.எம் ஜெஃப்ரி, எஸ்.சிவகுருநாதன், மஹிந்த ஹட்டிக,

எச்.டி.எஸ்.ஹெரத், மாற்றுக் கொள்கைளிற்கான மையத்தின் நிர்வாக இயக்குநர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசபிரிய, அதன் உறுப்பினர்கள்,

சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட மூன்று மாதங்களில் தேர்தல் நடத்தப்பட

வேண்டும் என்று மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 25 ம் திகதி தேர்தல் நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா பரவலால்

தேர்தலை நடத்த முடியாது என்று கூறி தேர்தலை பிற்போடும் வர்த்தமானியை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டது.

நிர்ணயிக்கப்பட்ட திகதியை மாற்ற தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரமில்லை.

அது மக்களின் இறையாண்மைக்கு உட்பட்டது. இந்த அறிவிப்பு மக்களின் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தமது வாக்களிக்கும் உரிமையை இழந்துவிட்டார்கள் என்று

குறிப்பிடப்பட்டுள்ளன.

தேர்தலை ஒத்திவைக்கும் முடிவை இரத்து செய்யக்கோரி விக்டர் ஐவன் உள்ளிட்ட 7 பேர் கோரியுள்ளனர்.

மாற்றுக்கொள்கைகளிற்கான இயக்குனர் பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்த மனுவில், அரசியலமைப்பின் படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தேர்தல்களை நடத்திய பின்னர் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.

அரசியலமைப்பின் விதிகளின்படி, புதிய நாடாளுமன்றம் ஜூன் இரண்டாவது நாளுக்கு முன்பு கூட்டப்பட வேண்டும்.

இருப்பினும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜூன் 20 ஆம் திகதி வரை பொதுத் தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழு எடுத்த முடிவு அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்கும்படி கோரியுள்ளார்.




தேர்தல் ஒத்திவைப்பிற்கு எதிராக மனுக்கள் சமர்ப்பிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு