26,Apr 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

அடிப்படை மனித உரிமை மீறல் மனு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் இன்று, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது

சட்டத்தரணி கௌரிசங்கர் தவராசா இந்த வழக்கை தாக்கல் செய்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஹிஜாஸிற்கு எந்த தொடர்புமில்லையென மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபர், சிஜடியின் இயக்குனர், சிஐடியின் தலைமை பொறுப்பதிகாரி உள்ளிட்ட 6 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி காரணம் குறிப்பிடப்படாமல் தனது வாடிக்கையாளர் கைது செய்யப்பட்டதாக, சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

சிஐடியினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹிஜாஸை சந்திக்க தமக்கு நேரம் ஒதுக்கப்படவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளது அடிப்படை மனித உரிமைகள் மீறல் என குறிப்பிடும்படி மனுவில் கோரப்பட்டுள்ளது.

தற்போது சிஐடியினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில், அவரது தந்தை மற்றும் சகோதரர் உயர்நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது




அடிப்படை மனித உரிமை மீறல் மனு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு