ஒன்ராறியோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,500ஐ கடந்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் ஒன்ராறியோவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 63பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,540ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், ஒரே நாளில் அதிகப்படியாக 477 புதிய வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19,598ஆக அதிகரித்துள்ளது.
ஒன்ராறியோவில் வியாழக்கிழமை 399 புதிய நோய்த் தொற்றுகளும், புதன்கிழமை 412 நோய்த் தொற்றுகளும், செவ்வாயன்று 387 நோய்த் தொற்றுகளும், திங்களன்று 370 புதிய நோய்த் தொற்றுகளும் பதிவாகின.
இன்றுவரை, 397,149 கொவிட்-19 சோதனைகளை ஒன்ராறியோ மாகாண அரசு முடித்துள்ளது. இதில் 16,295 சோதனைகள் நேற்று செய்யப்பட்டன.
அத்துடன், தற்போது ஒன்ராறியோவில் கொவிட்-19 காரணமாக 1,088பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.. 213 பேர் தீவிரச் சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
0 Comments
No Comments Here ..