13,May 2025 (Tue)
  
CH
உலக செய்தி

பாடசாலைகளை திறக்க முழுமையான பாதுகாப்பு வேண்டும்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படக்கூடாது என்று தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

அத்துடன், அடுத்த கட்ட பணிகளை நோக்கி முன்னோக்கி செல்லும் போது அமைச்சர்கள், தங்களுடன் இணைந்து பயணிக்குமாறு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான Trades Union Congress (TUC) வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் இங்கிலாந்தில் பாடசாலைகள் இயங்கக்கூடுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்தை ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் நிராகரித்தன.

இதேவேளை, பாடசாலைகளை மீண்டும் திறக்க சரியான நேரம் பற்றிய அறிவியல் ஆலோசனையைப் பின்பற்றுவதாக இங்கிலாந்தின் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இங்கிலாந்து முழுவதும் பாடசாலைகள் கடந்த மார்ச் இறுதி வாரத்தில் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




பாடசாலைகளை திறக்க முழுமையான பாதுகாப்பு வேண்டும்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு