06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

ருமெனியாவில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று

ருமெனியாவின் வடக்கு பகுதியில் உள்ள பொடசானி பிரதேசத்தில் தொழில் புரியும் எழு தொழிலாளர்கள் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் அண்மையில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் 5 தொழிலாளர்களுக்கே கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள தூதரகம் அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை ருமெனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த 44 இலங்கையர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்,

அவர்களில் ஏழு பேரே வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

தொழிலுக்கு சமூகமளிக்காமையின் காரணமாகவே அவர்கள் பணியில் இருந்து விலக்கப்பட்டதாக குறித்த ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு அவர்கள் பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் ருமேனியாவில் உள்ள தொழிலாளர்கள் தொடர்பாக ஆராயும் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கையர்களுக்கும் ருமேனியர்களுக்கும் தொழில் ரீதியாக சம உரிமை இருப்பதால், பதவி நீக்கம் குறித்து முறையான விசாரணை நடந்து வருவதாக ருமேனிய தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.




ருமெனியாவில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு